/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்/
/
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்/
ADDED : அக் 08, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரம்மோற்சவம்
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இந்து தர்மார்த்த சமிதி சார்பில் சென்னை, சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து, கடந்த 2ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட திருக்குடைகள், ஏழுமலையான் கோவிலில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
கோவில் கோபுர வாயில் அருகே, ஒன்பது திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்,ஆர்.கோபால்ஜி வழங்க, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி மற்றும் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
***