/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
/
இன்று கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
இன்று கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
இன்று கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
ADDED : பிப் 14, 2024 10:14 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொடி கயிறை கொண்டு, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கொடி ஏற்றப்படுகிறது.
அதிகாலை, கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தி, காலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள், உற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வருகிறார்.
முக்கிய விழாவாக, 21ம் தேதி தேர் திருவிழாவும், 22ம் தேதி பரிவேட்டை உற்சவமும், 24ம் தேதி தெப்பல் உற்சவமும் நடக்கின்றன. 27ம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

