/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு
/
கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு
ADDED : பிப் 27, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. 24ம் தேதி மாசி மக தெப்பத் திருவிழா நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் சீர்வரிசைகளுடன் உற்சவ மண்டபத்தில் குவிந்திருந்தனர்.
திருக்கல்யாண வைபவத்திற்கு பின், வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிரம்மோற்சவத்தை ஒட்டி, கந்தபெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.
கோவில் அன்னதான கூடத்தில், கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.

