/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் புதிததாக 31 ஓட்டுச்சாவடி
/
செங்கையில் புதிததாக 31 ஓட்டுச்சாவடி
ADDED : செப் 21, 2024 01:55 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு இறுதிப்படுத்துதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுர்களுடன் கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, 1,500க்கு அதிகமான வாக்காளர்களைக் கொண்ட ஓட்டுச்சாவடிகளை பிரித்து, 45 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.
அதில், 28 ஓட்டுச்சாவடிகளில், குறைவான வாக்காளர்களே உள்ளதால், 14 ஓட்டுச்சாவடிகளாக குறைக்கப்பட்டது. நான்கு ஓட்டுச்சாவடி மையங்களின் பெயர் திருத்தப்பட்டன.
அது மட்டுமின்றி, 15 ஓட்டுச்சாவடி மைய கட்டடங்கள் மாற்றப்பட்டன. 33 ஓட்டுச்சாவடி மையங்கள் இடம் மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில், 2,795 ஓட்டுச்சாவடிகள் இருந்தன.
தற்போது, புதிதாக 31 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டதால், 2,826 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் அக்., 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.