/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி; பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டுகோள்

UPDATED : ஆக 29, 2024 01:53 AM
ADDED : ஆக 29, 2024 01:47 AM

பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டுகோள்
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சாலை ஓரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக, தெரு விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் மற்றும் காசிபாட்டை சாலையை இணைக்கும் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள், சில வாரங்களாக பழுதடைந்துள்ளதால், இரவு நேரத்தில் சாலை இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.