/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டுபுகார் பெட்டி;ஆலத்துார் கோவில் குளக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

ADDED : அக் 24, 2024 12:17 AM

ஆலத்துார் கோவில் குளக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஈஸ்வரன் கோவில் தெருவில், கோவில் குளம் உள்ளது. குளத்தை சுற்றி போக்குவரத்து சாலைகள், குடியிருப்பு வீடுகள் உள்ளன.
ஆனால், குளத்தை சுற்றி எந்த ஒரு தடுப்பும் அமைக்கப்படவில்லை. இச்சாலை வழியாக அப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நடந்தும் வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
குளக்கரையோரம் தடுப்பு இல்லாததால், இரவு நேரத்தில் வாகனங்களில் வருவோர், குளத்தில் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, குளக்கரைக்கு தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ராம்குமார், ஆலத்துார்.