/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதர்மண்டிய சுகாதார வளாகம்; நெற்குணம் பெண்கள் அவஸ்தை
/
புதர்மண்டிய சுகாதார வளாகம்; நெற்குணம் பெண்கள் அவஸ்தை
புதர்மண்டிய சுகாதார வளாகம்; நெற்குணம் பெண்கள் அவஸ்தை
புதர்மண்டிய சுகாதார வளாகம்; நெற்குணம் பெண்கள் அவஸ்தை
ADDED : செப் 23, 2024 06:09 AM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே நெற்குணம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதையை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன், சூணாம்பேடு - தொழுப்பேடு சாலையோரத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்கள், சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், தற்போது மகளிர் சுகாதார வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதர்மண்டி உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெற்குணம் கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.