/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து எருமை மாடு பலி
/
மின்சாரம் பாய்ந்து எருமை மாடு பலி
ADDED : மே 21, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிக்குமார். இவர், எருமை மாடு வளர்த்து வந்தார்.
நேற்று காலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம், திருமணி சாலையில் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அங்கு, மின்வாரிய அலுவலகம் அருகில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த மின் கம்பியை, எருமை மாடு மிதித்துள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே எருமை மாடு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.