/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு
ADDED : டிச 09, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், பிணவறையின் முன் பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது.
இத்தொட்டியின் மேல்பகுதியில், கடப்பா கல் வைத்து மூடப்பட்டு இருந்தது.
நேற்று இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த எருமை மாடு ஒன்று, கழிவுநீர் தொட்டி மீது ஏறியது. அப்போது, பாரம் தாங்காமல் கடப்பா கல் உடைந்து, எருமை மாடு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டியில் இறங்கி, கயிறு வாயிலாக எருமை மாட்டை உயிருடன் மீட்டனர்.