/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 52 பள்ளிகளில் கட்டட பராமரிப்பு பணி துவக்கம்
/
செங்கையில் 52 பள்ளிகளில் கட்டட பராமரிப்பு பணி துவக்கம்
செங்கையில் 52 பள்ளிகளில் கட்டட பராமரிப்பு பணி துவக்கம்
செங்கையில் 52 பள்ளிகளில் கட்டட பராமரிப்பு பணி துவக்கம்
ADDED : டிச 05, 2024 11:04 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், 52 பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மின்சார பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 132 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் கட்டடங்கள் பராமரிப்பு, மின்சார பணிகள் செய்ய, பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு, முதன்மை கல்வி அலுவலர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 28 பள்ளிகளில் கட்டடங்கள் பராமரிப்பு 1.35 கோடி ரூபாயும், 19 பள்ளிகளுக்கு மின்சார பணிகள் செய்ய 43 லட்சம் ரூபாய்.
மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில், 24 பள்ளிகளில் கட்டட பராமப்பிற்கு 1.5 கோடி ரூபாயும், ஒன்பது பள்ளிகளுக்கு மின்சார பணிகள் செய்ய, 17 லட்சம் என, மொத்தம் 52 பள்ளிகளுக்கு, கட்டட பராமரிப்பு மற்றும் மின்சார பணிகளுக்கு, 3 கோடி ரூபாய் நிதி, 2024 - 25ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்து, செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலருக்கு, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.
இப்பணிகளை செயல்படுத்த, பொதுப்பணித் துறைக்கு, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் அனுப்பி வைத்தார். அதன் பின், பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மின்சார பணிகளை, பொதுப்பணித் துறையினர் செய்தனர்.
மேலும், பள்ளிகளில் பராமரிப்பு பணி மற்றும் மின்சார பணிகள் நடைபெறுவதை பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.