/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.65 லட்சத்தில் கட்டடங்கள்
/
அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.65 லட்சத்தில் கட்டடங்கள்
அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.65 லட்சத்தில் கட்டடங்கள்
அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.65 லட்சத்தில் கட்டடங்கள்
ADDED : ஜன 06, 2024 11:31 PM

மாமல்லபுரம்:கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. அணுமின் நிலைய நிர்வாகம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கல்பாக்கம் அடுத்த லட்டூர், பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில், தலா 21.36 லட்சம் ரூபாய் மதிப்பிலும், திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம் பகுதியில், 22.35 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டன. நிலைய இயக்குனர் சுதிர் கே.ஷெல்கே, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இதில், மனிதவள துணை பொது மேலாளர் வாசுதேவன், குழு உறுப்பினர் செயலர் ஜெகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.