/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூண்டிக்கு பேருந்து இயக்கம்
/
செம்பூண்டிக்கு பேருந்து இயக்கம்
ADDED : டிச 05, 2024 11:02 PM
மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பூண்டி ஊராட்சியில், 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
செம்பூண்டியில் இருந்து உத்திரமேரூர், மதுராந்தகம் நகரப் பகுதிக்கு செல்ல, பேருந்து வசதியின்றி இருந்தது. இதனால், கிராமவாசிகள் சிரமப்பட்டனர். செம்பூண்டி பகுதிக்கு பேருந்து இயக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுராந்தகத்திலிருந்து எல்.எண்டத்துார் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் தடம் எண்: 'டி15' பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து, செம்பூண்டி வழியாக காலை, மாலை வேளையில், எல்.எண்டத்துார் சென்று, உத்திரமேரூர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி நேற்று உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பேருந்தை துவக்கி வைத்தார்.