/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் சித்தாமூர், முருங்கையில் விபத்து அபாயம்
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் சித்தாமூர், முருங்கையில் விபத்து அபாயம்
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் சித்தாமூர், முருங்கையில் விபத்து அபாயம்
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் சித்தாமூர், முருங்கையில் விபத்து அபாயம்
ADDED : நவ 20, 2025 03:55 AM

சித்தாமூர்: சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மைய தடுப்பு மற்றும் சாலையோர தடுப்பில் பயணியர் அமர்ந்துள்ளனர். இதனால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச் சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
சித்தாமூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.
செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு செல்ல, தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் சூணாம்பேடு மார்கமாக செல்லும் சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கத்தின் போது நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
தடுப்பு சாலை விரிவாக்கம் செய்தபின் நிழற்குடை அமைக்கப்படா மல் உள்ளதால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் சாலையோர தடுப்பு, மையத் தடுப்புகள் மீது அமர்ந்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தம் சாலை சந்திப் பில் அமைந்துள்ளதால், க னரக வாகனங்கள் சாலையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிற்கும் பயணியர் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
துறை சார்ந்த அதிகாரிகள் சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியு றுத்துகின்றனர்.
முருங்கை முருங்கை கூட்டுச்சாலை சந்திப்பில், நிழற் குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில், 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கல், கொங்கரை, ஒரத்தி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, வந்தவாசி செல்லும் நெடுஞ் சாலை உள்ளது. இதில், முருங்கை கூட்டுச்சாலை சந்திப்பு முக்கிய பகுதியா க உள்ளது.
மதுராந்தகத்தில் இருந்து முருங்கை கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண்: '12ஏ' நகர பேருந்து, இந்த கூட்டுச்சாலை வழியாக செல்கிறது.
முருங்கை கூட்டுச்சாலை சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணி யர் மழை மற்றும் வெயில் நேரத்தில் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் பேருந்து நி ழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

