/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் -- செங்கல்பட்டு தடத்தில் பேருந்து சேவையில் பயணியர் அதிருப்தி
/
திருப்போரூர் -- செங்கல்பட்டு தடத்தில் பேருந்து சேவையில் பயணியர் அதிருப்தி
திருப்போரூர் -- செங்கல்பட்டு தடத்தில் பேருந்து சேவையில் பயணியர் அதிருப்தி
திருப்போரூர் -- செங்கல்பட்டு தடத்தில் பேருந்து சேவையில் பயணியர் அதிருப்தி
ADDED : நவ 20, 2025 03:54 AM

திருப்போரூர்: திருப்போரூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் தாழ்தள சிறப்பு பேருந்தால், எந்த பயனும் இல்லை என, பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., உள்ளது. இடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், வளர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 113 கோ டி ரூபாய் மதிப்பில், இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தடத்தில், விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பயணிக்கின்ற னர்.
சில வாரங்களுக்கு முன், திருப்போரூர் - செங்கல்பட்டு இடையே சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அவை பயனாக இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
திருப்போரூர் - செங்கல்பட்டு இடையே சிறப்பு பேருந்து விடப்பட்டது. அவை சென்னை புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் டீலக்ஸ் பேருந்து போன்று இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனா ல் இது மக்களுக்கு பயனில்லை.
இந்த பே ருந்தில் மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசம் கிடையாது. குறிப்பாக அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் இப்பேருந்து நிறுத்தப்படுவதில்லை.
இதனால் அனை த்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாதாரண பேருந்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

