/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய வேளாண் நிறுவனத்தில் சி.சுப்பிரமணியம் சிலை திறப்பு
/
தேசிய வேளாண் நிறுவனத்தில் சி.சுப்பிரமணியம் சிலை திறப்பு
தேசிய வேளாண் நிறுவனத்தில் சி.சுப்பிரமணியம் சிலை திறப்பு
தேசிய வேளாண் நிறுவனத்தில் சி.சுப்பிரமணியம் சிலை திறப்பு
ADDED : பிப் 13, 2025 02:07 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இல்லீடு கிராமத்தில் தேசிய வேளாண் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராம புற விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி, விழிப்புணர்வு, நீர்மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் 25 ம் ஆண்டை கொண்டாடும் நிகழ்வாக தேசிய வேளாண் நிறுவனத்தின் நிறுவனர், இந்திய பசுமை புரட்சி சிற்பி சி.சுப்பிரமணியம் வெண்கல சிலை திறப்பு விழா நேற்று காலை இல்லீடு கிராமத்தில் உள்ள ஊரக மேம்பாட்டு மைய அலுவலகத்தில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேசிய வேளாண் நிறுவனத்தின் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார்.
விழாவில் சிற்பி சி.சுப்பிரமணியத்தின் சேவை, வேளாண் துறையில் ஏற்படுத்திய புரட்சி குறித்து நினைவு கூரப்பட்டது. விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

