/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 06, 2025 02:35 AM
செங்கல்பட்டு:தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் விருது பெற, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் அம்பேத்கர் விருது, 2026ம் ஆண்டு, திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்பட உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதல் தளம், அறை எண் 108ல் இயங்கி வரும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.