/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
பெண் குழந்தைகள் தின விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 06, 2025 02:38 AM
செங்கல்பட்டு:தேசிய பெண் குழந்தைகள் தின விருதை பெற பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, செங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்பட்ட பெண் குழந்தைகளுக்கு, 1 லட்சம் ரூபாயுடன் சான்று பத்திரம் வழங்கப்பட உள்ளது. 2026ம் ஆண்டு, ஜனவரி 24ம் தேதி வழங்கப்பட உள்ள இந்த விருதிற்கு, தமிழகத்தில் வசிக்கும் தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் பெண் குழந்தைகள், வரும் டிசம்பர் 31ம் நாளில், 13 வயது நிரம்பியவர்களாகவும், 18 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
தவிர, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் உட்பட வேறு ஏதாவது வகையில், பெண் குழந்தைகள் நலன் சார்ந்த சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் குழந்தைகள், தமிழக அரசின் www.awards.tn.gov.in என்ற இணையத்தில், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் பதிவு செய்தபின், பெண் குழந்தைகள் நலனுக்காக தாங்கள் செய்த பணிகளின் விபரங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, அதன் மூன்று பிரதிகளை டிச.,5க்குள், செங்கை மாவட்ட அலுவலகத்தில், உரிய பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.