/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 12, 2025 10:02 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு, வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு, மொத்தம் 271 இடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான காலியிடங்கள் தொடர்பான விபரங்களை https.//cmccpt.ac.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 2025 - 26ம் கல்வியாண்டிற்கான, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை நடக்கிறது.
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை வரும் 17ம் தேதிக்குள், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.