/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு
/
'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு
ADDED : ஜன 29, 2025 12:42 AM
செங்கல்பட்டு,
முதல்வரின் 'காக்கும் கரங்கள்' என்ற திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஆகியோர் தொழிலதிபர் ஆகலாம். இத்திட்டத்தின் வாயிலாக, தாங்கள் தொழில் துவங்க 1 கோடி ரூபாய் வரை, கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.
பயனாளிகள் தொழில் துவங்குவது சம்பந்தமாக, மாவட்ட தொழில் மையம் வாயிலாக, இலவச அறிவுரைகள் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண்; 044- 22262023 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.