/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊர்காவல் படையில் சேர மீனவர்களுக்கு அழைப்பு
/
ஊர்காவல் படையில் சேர மீனவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 13, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை, ஊர்காவல் படையில் சேர்க்க, ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், 20 -45 வயதுக்குட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீனவ இளைஞர்கள், காவல் உதவி ஆணையர் -- ஆயுதப்படை, ஊர்காவல்படை - பொறுப்பு, தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, பதுவஞ்சேரி, சென்னை- 126 என்ற விலாசத்திற்கு, பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு ஊர்காவல் படை- படை தளபதி - 9884233744, ஊர்காவல் படை- படைப்பிரிவு தலைவர் -9940098733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

