/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 16, 2024 12:08 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோரது ஆண்டு வருமானம், 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நடப்பாண்டில், புதிய மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு, தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.