/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் துவங்க மகளிருக்கு அழைப்பு
/
தொழில் துவங்க மகளிருக்கு அழைப்பு
ADDED : நவ 28, 2025 04:09 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வணிகம் சார்ந்த தொழில் துவங்க, மகளிர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
தமிழக பொருளாதார வளர்ச்சியில், பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனுதவி வழங்கப்படும்.
இதற்காக, 25 சதவீதம் மானியம், அதாவது அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை மானியம் மற்றும் உரிய பயிற்சி அளிக்கப்படும்.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இதை பெற, 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயது என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை யும், 044- 2999 5351 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

