/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
/
கல்பாக்கம் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
கல்பாக்கம் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
கல்பாக்கம் பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி
ADDED : நவ 28, 2025 04:08 AM
புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு 8:00 மணியளவில், தான் பயி லும் பள்ளி மைதானம் பகுதியில், சிறுவன் உடலில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
பலத்த தீக்காயமடைந்து அலறியதைப் பார்த்த அங்கிருந்தோர், சிறுவனை மீட்டு அணுசக்தி துறை மருத்துவ மனையில் முதலுதவி அளித்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டார்.
மாணவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், எதற்காக தற்கொலை முயற்சி செய்தார் என, கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.