/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீட்கப்பட்ட குழந்தைகளை உரிமை கோர அழைப்பு
/
மீட்கப்பட்ட குழந்தைகளை உரிமை கோர அழைப்பு
ADDED : அக் 02, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,:செங்கல்பட்டில் மீட்கப்பட்ட ஆண், பெண் குழந்தைகளை உரிமை கோருவோர், குழந்தைகள் நல குழுவை அணுகலாம்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை, கடந்த ஏப்., 11ம் தேதி மீட்கப்பட்டது.
இதேபோன்று, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் கலைக்கல்லுாரி அருகே, கடந்த செப்., 22ம் தேதி, ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது.
குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில், இக் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உரிமை கோர விரும்புவோர், 30 நாட்களுக்குள், செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில், தக்க சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளவும்.