/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடைந்த மண் வடிகட்டி மாற்றி அமைக்கப்படுமா?
/
உடைந்த மண் வடிகட்டி மாற்றி அமைக்கப்படுமா?
ADDED : ஆக 18, 2025 02:19 AM

வண்டலுார்:வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே, மழைநீர் வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள உடைந்த மண் வடிகட்டியை மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பிலிருந்து, செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழியில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முன், ஜி.எஸ்.டி., சாலையோரம் மழைநீர் வடிகால் உள்ளது. இதன் மேல் பகுதியில், மண் வடிகட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதில் ஒரு மண் வடிகட்டியின் இரும்பு சட்டம், 10 நாட்களுக்கு முன் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது.
பின், அந்த வடிகட்டி இரும்பு சட்டத்தை புதிதாக பொருத்தாமல், சேதமடைந்த வடிகட்டியை பொருத்தி உள்ளனர்.
வடிகட்டியின் இரும்பு சட்டம் உடைந்திருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், இரவு நேரத்தில் அதனுள் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர்.
இதனால் பெரும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, புதிய வடிகட்டி இரும்பு சட்டத்தை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.