/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பனை: 4 பேர் சிக்கினர்
/
கஞ்சா விற்பனை: 4 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 04, 2025 11:47 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, நந்திவரம் மல்லேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா, 23. கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவர் சிறைக்கு சென்றுள்ளார்.
தற்போது ஜாமினில் வந்த அப்துல்லா, தன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பதாக, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் வந்ததால் கண்காணித்தனர்.
நேற்று காலை 6:15 மணியளவில், தன் நண்பர்களான ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த விஷ்ணு, 21, மற்றும் ராணி அண்ணா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த தாமஸ், 24, ஆகியோருடன் சேர்ந்து, நந்திவரம் ஏரி அருகே கஞ்சா விற்றுள்ளார்.
அப்போது, சுற்றிவளைத்த போலீசார், அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் பிடித்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதேபோல் நேற்று, வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம், இடுகாடு அருகே, நேற்று காலை 11:00 மணியளவில் கஞ்சா விற்ற மண்ணிவாக்கம், ராஜிவ் தெருவைச் சேர்ந்த அபினேஷ், 26, என்பவரை, ஓட்டேரி போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.