/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் ரயில் தடத்தில் கஞ்சா விற்பனை ஜோர்
/
சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் ரயில் தடத்தில் கஞ்சா விற்பனை ஜோர்
சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் ரயில் தடத்தில் கஞ்சா விற்பனை ஜோர்
சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் ரயில் தடத்தில் கஞ்சா விற்பனை ஜோர்
ADDED : ஜூன் 23, 2025 11:36 PM
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் ரயில் தடத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் - பரனுார் ரயில் தடத்தையொட்டி திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், விக்னேஷ் கார்டன், சாய் விக்னேஷ் நகர், பகத்சிங் நகர், டாக்கா நகர், பரனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இவர்கள் மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில், சமீப காலமாக இளைஞர்களை குறிவைத்து, ரயில் தண்டவாளங்களின் அருகில் காலை மற்றும் மாலை நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, இப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் துவங்கி, பரனுார் ரயில் நிலையம் வரை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதால், புதிய நபர்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி அடிதடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரயில்களில் படிகளில் பயணம் செய்வோரை தடிகளால் தாக்கி, மொபைல் போன் பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
எனவே, இந்த குற்றங்களை தடுக்க, ரயில் தண்டவாளங்களை ஒட்டி உள்ள பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.