/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை டிரைவருக்கு விருது
/
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை டிரைவருக்கு விருது
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை டிரைவருக்கு விருது
கன்டோன்மென்ட் கிரிக்கெட் பரங்கிமலை டிரைவருக்கு விருது
ADDED : பிப் 14, 2024 11:26 PM

சென்னை,:இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் தென் மண்டலத்தில், 19 கன்டோன்மென்ட் அலுவலகங்கள் மற்றும் ஏழு எஸ்டேட் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், ஜன., 6, 7ம் தேதியில் நடைபெற்றது.
பரங்கிமலை, கண்ணுார், செகந்திராபாத், ஊட்டி ஆகிய கன்டோன்மென்ட் ஊழியர்கள் மற்றும் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ராணுவ எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில், சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் முதலிடம் பிடித்தது. இறுதி போட்டி, கடந்த 10, 11ம் தேதிகளில் புனேயில் நடைபெற்றது.
இதில், ஆமதாபாத் கன்டோன்மென்ட் முதலிடத்தையும், புனே கன்டோன்மென்ட் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
பரங்கிமலை கன்டோன்மென்டில் பணிபுரியும் ஓட்டுனர் பிரான்சிஸ், சிறந்த பந்து வீச்சாளர் விருது பெற்றார்.