/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு
/
தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு
தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு
தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2025 02:43 AM
தாம்பரம்:கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., பிரமுகர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் அருகே பெருங்களத்துார் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. இவரது மனைவி ரம்யா, 40, தனியார் பள்ளி ஆசிரியை.
சுப்பிரமணி, தன் வீட்டின் அருகே வசிக்கும் பா.ஜ., பிரமுகர் பழனிவேல் என்பவருக்கு, 2022ம் ஆண்டு, பல தவணைகளாக, 40 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுப்பிரமணி, ரம்யா இருவரும், பழனிவேல் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, பழனிவேல் பணத்தை தர மறுத்ததோடு, தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பீர்க்கன் காரணை காவல் நிலையத்தில், சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்படி, பழனி வேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.