/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்
/
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி அட்டூழியம்
ADDED : ஆக 18, 2025 02:24 AM

கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கத்தில், மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, செங்கல் கட்டுமானத்தால் கொட்டகை அமைத்துள்ளனர்.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்குள்ள காந்தி நகர் 2வது பிரதான சாலையில், நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.
இத்தெருவில் வசித்துவரும் தனிநபர், தன் இடத்தை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயை முழுதுமாக ஆக்கிரமித்து, செங்கல் சுவர் எழுப்பி, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரையிலான கொட்டகை அமைத்து, அதில் மாடுகளை பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் அமைத்தால், மழைக்காலங்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, மழைநீரால் பகுதி மக்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.எனவே, இந்த ஆக்கிரமிப்பை துவக்கத்திலேயே அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், இவரை பின்பற்றி பலரும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.