/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரண்டரை வயது குழந்தையை துன்புறுத்திய தந்தை மீது வழக்கு
/
இரண்டரை வயது குழந்தையை துன்புறுத்திய தந்தை மீது வழக்கு
இரண்டரை வயது குழந்தையை துன்புறுத்திய தந்தை மீது வழக்கு
இரண்டரை வயது குழந்தையை துன்புறுத்திய தந்தை மீது வழக்கு
ADDED : டிச 03, 2024 08:40 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இரண்டரை வயது குழந்தையை, அவரது தந்தை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதாக, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098க்கு, ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்று குழந்தையை மீட்டு, விசாரணைக்குப் பின் காப்பகத்தில் சேர்த்தனர்.
விசாரணையில், குழந்தையின் பெற்றோர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர்.
தற்போது, தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தையை, அவர் தாக்கி வீடியோ எடுத்தது தெரிந்தது. மேலும், குழந்தையின் கையில் இருந்த தீக்காயம் குறித்து விசாரித்த போது, குழந்தையின் தாய் சூடு வைத்தது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, குழந்தைகள் நல அலுவலர்கள் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.