/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் குட்கா விற்றவர் மீது வழக்கு
/
செங்கையில் குட்கா விற்றவர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2025 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள டீ கடையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்கள் சிக்கின. அவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடையின் உரிமையாளரான செங்கல்பட்டு அடுத்த குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்,21, என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து, மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

