/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் வீட்டை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
பெண் வீட்டை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜன 02, 2025 02:37 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பாலுார் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் சிரஞ்சீவி,26. இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா, 20, என்பவருக்கும், கடந்த பிப்ரவரியில் காதல் திருமணம் நடந்துள்ளது.
சிரஞ்சீவிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 25ம் தேதி மாலை ஏற்பட்ட சண்டையால் விரக்தியடைந்த சிரஞ்சீவி, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 31ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், சிரஞ்சீவியின் உறவினர்களான பாலுார் கிராமத்தைச் சேர்ந்த சுள்ளான், 24, மூர்த்தி,25, பிரசாந்த் உள்ளிட்டோர், கீர்த்திகாவின் சித்தி வீட்டின் கதவு மற்றும் வீட்டில் இருந்த மீன் தொட்டிகளை உடைத்து, அங்கிருந்தோரை மிரட்டி விட்டுச் சென்று உள்ளனர்.
இதுகுறித்த புகாரின்படி, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

