/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பூங்கா அருகே டாஸ்மாக் அகற்ற வழக்கு
/
வண்டலுார் பூங்கா அருகே டாஸ்மாக் அகற்ற வழக்கு
ADDED : நவ 28, 2025 04:05 AM
சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்காவின் எதிர் பக்கத்தில் உள்ள மது கடையை அகற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பீர்க்கன்காரணையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், வண்டலுாரில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா முன் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 'மனுதாரர் கூறும் மதுபான கடை, தடை செய்யப்பட்ட பகுதியில் இல்லை என்றாலும், தேசி ய விலங்கியல் பூங்கா முன் இருப்பதால், அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து அரசு பரசீலனை செய்து, இரண்டு வாரங்களில் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை டிச., 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

