/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
205 பேருக்கு கண்புரை ஆப்பரேஷன்
/
205 பேருக்கு கண்புரை ஆப்பரேஷன்
ADDED : மார் 31, 2025 02:10 AM
கல்பாக்கம்,:கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம், சுற்றுப்புற பொதுமக்களுக்கான இலவச சேவையாக, அதன் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
இம்முகாமில், கல்பாக்கம் சுற்றுப்புற பகுதியினர், 3,050 பேருக்கு, சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுவினர் கண்களை பரிசோதித்தனர்.
மேலும், பள்ளி மாணவ - மாணவியர் 144 பேருக்கு, பிரத்யேகமாகவும் பரிசோதிக்கப்பட்டது.
பொதுமக்களில், கண்புரையால் பாதிக்கப்பட்ட 205 பேருக்கு, இலவசமாக அறுவை சிகிச்சை அளித்து மாத்திரைகள், மருந்து அளிக்கப்பட்டது.
கண் பார்வை குறைபாடுள்ள 2,107 பேருக்கு, மூக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளது. நிறைவு விழாவில், நிலைய இயக்குநர் சேஷையா, மனிதவள மேலாளர் வாசுதேவன், தமிழ்நாடு அணுமின் ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.