/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மாட்டு பொங்கல் கோலாகலம்
/
செங்கையில் மாட்டு பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 17, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், தைப் பொங்கல் நேற்றுமுன்தினம், நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாட்டு பொங்கல் விழாவையொட்டி, நேற்று, கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணங்கள் தீட்டனர்.
மாலை 5:00 மணிக்கு, மாடுகளுக்க பொட்டுகள் வைத்து, அலங்காரம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
அதன்பின், நிலத்தல் உழவு பணியை துவக்கினர். நகர்புறங்களில், பசு மாட்டிற்கு அலங்காரம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மாடுகளுக்கு பழங்கல் வழங்கினர். கிராமப்புறங்களில், மாட்டுப் பொங்கலை உற்சாகமாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொண்டடினர்.

