/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் ' சிசிடிவி ' கேமரா அமைப்பு
/
ஊரப்பாக்கத்தில் ' சிசிடிவி ' கேமரா அமைப்பு
ADDED : செப் 22, 2024 03:08 AM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் பிரதான சாலையில், சமீபகாலமாக வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோத கும்பல் சுற்றி திரிகின்றது.
அதனால், இப்பகுதிவாசிகள் அச்சமடைந்ததை தொடர்ந்து, அரிமா சங்க நிர்வாகிகள், இப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்கு, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் அனுமதி பெற்றனர்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை பிரியா நகர் நுழை வாயில் மற்றும் விநாயகர் கோவில் அருகில் என, நான்கு 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. திறப்பு விழாவில், லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.