/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பேர் கண்டிகையில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்
/
பெரும்பேர் கண்டிகையில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்
பெரும்பேர் கண்டிகையில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்
பெரும்பேர் கண்டிகையில் சிமென்ட் சாலை பணிகள் துவக்கம்
ADDED : ஆக 31, 2025 10:40 PM
அச்சிறுபாக்கம்:பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், தாந்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி உள்ளது. இங்கு, மிகவும் பழமையான தாந்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்குச் செல்லும் மண் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, நடக்க முடியாத அளவிற்கு சகதியாக மாறி, பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த சாலையை சிமென்ட் சாலையாக அமைக்க கோரி பக்தர்கள், கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இந்த சாலையை சிமென்ட் சாலையாக அமைக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கனிம வள நிதியிலிருந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.