/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் வெள்ளிமேடில் சிமென்ட் சாலை சேதம்
/
செய்யூர் வெள்ளிமேடில் சிமென்ட் சாலை சேதம்
ADDED : ஜூன் 15, 2025 01:57 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சி வெள்ளிமேடு பகுதியில் சிமென்ட் சாலை பழுதடைந்து உள்ளதால் கிராமவாசிகள் அவதிப்படுகின்றனர்.
செய்யூர் ஊராட்சியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றி நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை பழுதடைந்து உள்ளது, இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் பழுதடைந்த சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வெள்ளிமேடு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்கின்றனர்.