/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ளப்புத்துார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை
/
வெள்ளப்புத்துார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை
வெள்ளப்புத்துார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை
வெள்ளப்புத்துார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை
ADDED : ஏப் 29, 2025 12:07 AM
அச்சிறுபாக்கம்,
அச்சிறுபாக்கம் ஒன்றியம், வெள்ளப்புத்துார் ஊராட்சியில், 1924ல் பள்ளி துவங்கப்பட்டது. தற்போது, 2024ல் நுாறாண்டைக் கடந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நுாற்றாண்டு விழா நடந்தது.
இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் ஊர்மிளா முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி மற்றும் வட்டார கல்வி அலுவலர் பழனிவேலன் பங்கேற்றனர்.
பள்ளி நுாற்றாண்டு விழாவில் நடைபெற்ற கவிதை, பேச்சு, நடனம், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

