/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இயற்கை உரம் கிலோ ரூ.20 விற்பதற்கு மையம் துவக்கம்
/
இயற்கை உரம் கிலோ ரூ.20 விற்பதற்கு மையம் துவக்கம்
ADDED : செப் 28, 2025 02:28 AM
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஏதுவாக, விற்பனை மையம் நேற்று துவங்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலமான பெருங்களத்துாரின் 15 வார்டுகளில், தினம் 100 டன் குப்பை சேகரமாகிறது. இதில், மக்கும் குப்பை மட்டும் 20 டன்.
இந்த மக்கும் குப்பை, ஆறு இடங்களில் உள்ள பசுமை உரக்கிடங்குகளில் கொட்டி, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 40 நாட்களில் உரம் தயார் செய்து, அவற்றை சலித்து, பாக்கெட்டாக மாற்றி, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இயற்கை உரத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஏதுவாக, மண்டல அலுவலகத்தில், செழிப்பு இயற்கை உர விற்பனை மையம், நேற்று துவங்கப்பட்டது. இந்த மையத்தில், கிலோ உரம், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையலாம்.