/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் சுவாசினி பூஜை
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் சுவாசினி பூஜை
ADDED : செப் 28, 2025 02:39 AM

சேலையூர்:ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் வளாகத்தில் நடந்துவரும் நவராத்திரி மகோத்சவத்தில், சுவாசினி பூஜை நடத்தப்பட்டது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி விழாவை ஒட்டி, வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திவ்யதேசம் என்ற காட்சி மையத்தை, காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.
நவராத்திரி மகோத்வத்தின் ஒரு பகுதியாக, அனுஷம் நட்சத்திர தினமாகிய நேற்று, லலிதா த்ரிஸதியின் ஒவ்வொரு நாமத்திற்கும், ஒரு சுவாசினியை அமர வைத்து, அவர்களுக்கு சுவாசினி பூஜை செய்யப்பட்டது.
நவராத்திரி மகோத்வத்தில், இன்று இரவு 7:00 மணிக்கு, மல்லாடி சகோரர்களின் இசை கச்சேரி நடக்கிறது.