/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
/
மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ADDED : டிச 19, 2024 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்-3 சீவக சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் கோமதி,76. நேற்று காலை, இதே தெருவில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.
கோமதி செயினை பிடித்துக் கொண்டதால், ஒரு பகுதி 2 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.