/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சண்டிகேஸ்வரர் திருத்தேர் திருக்கழுக்குன்றத்தில் வெள்ளோட்டம்
/
சண்டிகேஸ்வரர் திருத்தேர் திருக்கழுக்குன்றத்தில் வெள்ளோட்டம்
சண்டிகேஸ்வரர் திருத்தேர் திருக்கழுக்குன்றத்தில் வெள்ளோட்டம்
சண்டிகேஸ்வரர் திருத்தேர் திருக்கழுக்குன்றத்தில் வெள்ளோட்டம்
ADDED : மே 01, 2025 01:30 AM

திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சண்டிகேஸ்வரர் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, 10 நாட்கள் நடைபெறும். விழாவில், ஏழாம் நாள் உற்சவமாக வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், திருத்தேர்களில் உலா செல்வர்.
பிற சுவாமியருக்கு, தனித்தனி திருத்தேர் உண்டு. இதில் சண்டிகேஸ்வரருக்கு திருத்தேர் இல்லாமல், சப்பர வாகனத்தில் உலா சென்றார்.
அவருக்கும் திருத்தேர் உருவாக்குமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருத்தேர் செய்வதாக, சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த அன்புச்செழியன் என்ற உபயதாரர் வாயிலாக, 21 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு தேர் செய்யும் பணி துவக்கப்பட்டது.
தற்போது, 21.5 அடி உயர மரத்தேர் செய்யப்பட்டு, நேற்று வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, தேரில் கும்பத்தை எழுந்தருள செய்து, காலை 9:30 மணிக்கு, நிலையிலிருந்து தேர் புறப்பட்டது.
பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சதுரங்கப்பட்டினம் சாலை, கருங்குழி சாலை, பெரிய தெரு வழியாக தேர் சென்று, 12:10 மணிக்கு நிலையை அடைந்தது.
கோவில் செயல் அலுவலர் புவியரசு, உபயதாரர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.