/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகளில் மாற்றம்
/
இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகளில் மாற்றம்
ADDED : ஜன 04, 2025 09:27 PM
மாமல்லபுரம்:தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில், கடந்த டிச., 22ம் தேதி முதல், இந்திய நாட்டிய விழா நடக்கிறது. இம்மாதம் 20ம் தேதி வரை, தினசரி மாலை நடத்தப்படும் விழாவில், பரதம், கதகளி, ஒடிசி உள்ளிட்ட நாட்டியங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை முன்னிட்டு, தமிழக அரசு ஒருவார துக்கம் கடைபிடித்ததால், கடந்த டிச., 27ம் தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை, விழா ரத்து செய்யப்பட்டது.
ஜன., 2ம் தேதி, விழா மீண்டும் விழா துவக்கப்பட்டு நடக்கிறது. விழா ரத்தான ஆறு நாட்களில், நாட்டியங்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடாகியிருந்த குழுவினருக்கு, வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
அவர்களுக்கும், வாய்ப்பளிக்க முடிவெடுத்த சுற்றுலாத்துறை, ஜன., 20ம் தேதிக்குள், இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடக்கவிருந்த நாட்களில், நான்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கேற்ப தற்போது மாற்றம் செய்து, ஏற்பாடு செய்துள்ளது.

