/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுக்கரணை கோவிலில் தேர் திருவிழா விமரிசை
/
காட்டுக்கரணை கோவிலில் தேர் திருவிழா விமரிசை
ADDED : அக் 12, 2024 11:21 PM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த காட்டுக்கரணையில், பழமையான ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், 51வது ஆண்டு தேர் திருவிழாவையொட்டி, நேற்று காலை 8:15 மணிக்கு, ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருத்தேரில் எழுந்தளினர்.
அதன்பின், காலை 10:15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க, கிராம மக்கள் ஒன்று கூடி 'கோவிந்தா... கோவிந்தா' என, உச்சரித்தபடி, தேரை வடம்பிடித்து இழுத்து, நான்கு மாட வீதிகளிலும், தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இரவு புஷ்ப விமானத்தில், மின் விளக்கு அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவை உபயதாரர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.