/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருநீர்மலை கோவிலில் தேரோட்டம் விமரிசை
/
திருநீர்மலை கோவிலில் தேரோட்டம் விமரிசை
ADDED : மார் 23, 2025 08:17 PM
பல்லாவரம்:பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. சிம்ம வாகனம், அம்ச வாகனம், கருட வாகனம் என, தினமும் ஒரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, நேற்று நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக சுற்றி வந்தது.
இதில், ஏராளமானோர் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் செல்லும் பாதையில், பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.