sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை புல்வெளி பொலிவால் வசீகரம் படம் மட்டும்

/

சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை புல்வெளி பொலிவால் வசீகரம் படம் மட்டும்

சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை புல்வெளி பொலிவால் வசீகரம் படம் மட்டும்

சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை புல்வெளி பொலிவால் வசீகரம் படம் மட்டும்


ADDED : பிப் 06, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டையில் ஏற்படுத்திய புல்வெளி பொலிவு வசீகரிக்கிறது.

கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் பகுதியில், கி.பி.17ம் நுாற்றாண்டு டச்சுக்கோட்டை புகழ்பெற்றது. அக்காலத்தில், டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டு வர்த்தகர்கள், இங்கு குடியேறி வசித்தனர். இப்பகுதி கடற்கரை அருகில், பிரமாண்ட கோட்டை உருவாக்கி வசித்த அவர்கள், ஆடை, நறுமண பொருட்கள் விற்பனை செய்தனர். பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர்.

அவர்களின் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சியை கண்ட ஆங்கிலேயர், கடந்த 1796ம், 1818ம் ஆகிய ஆண்டுகளில் படையெடுத்து, கோட்டையை அழித்தனர். அதன் எஞ்சிய பகுதி, தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அத்துறையினரின் அகழாய்வில், வசிப்பிட கட்டடம், நடன கூடம், தானிய கிடங்குகள், சீனா, ஜெர்மன் ஆகிய நாட்டு சுடுமண் பாத்திர கலன்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்தனர்.

மேலும், டச்சு பிரமுகர்களின் கல்லறைகள், நுழைவாயிலில் பீரங்கிகள் ஆகியவைகளும் உள்ளன. கோட்டை இடிபாட்டு கட்டடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை, பழங்கால பாரம்பரிய முறையில் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முந்தைய கால சரித்திர சான்றாக விளங்கும் கோட்டையை, சுற்றுலாவிற்காக மேம்படுத்தும் அவசியம் குறித்து, தினமலர் நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, முதல்கட்டமாக, கோட்டை வெளிப்புற வளாகத்தில், செம்மண் நிரப்பி சமன்செய்து, எரு உரமிட்டு, நீர் இறைக்கும் சுழல் பம்ப் அமைக்கப்பட்டது. பசுமை புற்கள் நடப்பட்டு, தற்போது ரம்மிய புல்வெளி உருவாகி, பொலிவு பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us