/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பஸ் நிலைய பணிகள் செம்டம்பருக்குள் முடிக்க உத்தரவு
/
செங்கை பஸ் நிலைய பணிகள் செம்டம்பருக்குள் முடிக்க உத்தரவு
செங்கை பஸ் நிலைய பணிகள் செம்டம்பருக்குள் முடிக்க உத்தரவு
செங்கை பஸ் நிலைய பணிகள் செம்டம்பருக்குள் முடிக்க உத்தரவு
ADDED : ஏப் 24, 2025 09:17 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகள் முழு வீச்சில் நடைபெற, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம் அருகில் மேற்பார்வை மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் ஆகியவை அமைந்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பின், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'டெண்டர்' விடப்பட்டது.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பணிகள் துவங்கி மந்தமாக நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கலெக்டர் அருண்ராஜ், பேருந்து நிலைய பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், பேருந்து நிலைய பணிகளை, முழு வீச்சில் நடைபெற வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

