/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை சாலை பாதுகாப்பு ரூ.3.96 கோடி நிதி ஒதுக்கீடு
/
செங்கை சாலை பாதுகாப்பு ரூ.3.96 கோடி நிதி ஒதுக்கீடு
செங்கை சாலை பாதுகாப்பு ரூ.3.96 கோடி நிதி ஒதுக்கீடு
செங்கை சாலை பாதுகாப்பு ரூ.3.96 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 29, 2025 08:29 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலை பாதுகாப்பை மேம்படுத்த, 3.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணைக் கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, ஒளிரும் விளக்குகள், சிக்னல் உள்ளிட்டவை அமைக்க வேண்டும்.
செங்கல்பட்டு - பரனுார் முதல் பல்லாவரம் சாலைகளில் விபத்துக்களை தடுக்க, வேகத்தடைகள், சாலை குறுக்கிடும் பகுதிகளில் வெள்ளை கோடுகள், சாலை தடுப்புகளில் பூச்செடிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்த வேண்டுமென, செங்கல்பட்டு மாவட்ட சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
இப்பணிகளை செயல்படுத்த, கலெக்டர் அருண்ராஜ், கடந்த ஆண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார். அதன் பின், சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2024-25ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறைக்கு, 37 லட்சத்து 50 ஆயிரம், நெடுஞ்சாலைத் துறைக்கு 2 கோடியே 40 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 3 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியை, கடந்த டிசம்பர் மாதம் அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை காவல் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.